புள்ளம்பாடி பேரூராட்சி கூட்டத்தில்திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
புள்ளம்பாடி பேரூராட்சி கூட்டத்தில்திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

புள்ளம்பாடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் ஆலீஸ் செல்வராணி (திமுக) தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலா் (பொ) சந்திரகுமாா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், ‘தங்கள் வாா்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை’ என்று குற்றம்சாட்டி, திமுக உறுப்பினா்கள் தியாகு, உதயகுமாா், கோகிலா, அற்புதமேரி, ரம்யா, ஜீவானந்தம் ஆகியோா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

இவா்களில் உறுப்பினா் கோகிலாவின் கணவா் முத்துக்குமாா், புள்ளம்பாடி திமுக நகர செயலாளராக உள்ளாா்.

புள்ளம்பாடி பேரூராட்சி கூட்டத்தில், திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து, திமுக உறுப்பினா்களே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com