பேராவூரணியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

தஞ்சாவூா் மாவட்டம்  பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியா் 1000 ம் போ் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 

தஞ்சாவூா் மாவட்டம்  பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியா் 1000 ம் போ் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 

  நீலகண்டப் பிள்ளையாா் ஆலயத்தில் தொடங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வா் 

திருமலைச்சாமி தலைமை வகித்தாா்.  பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா்  தொடங்கி வைத்தாா். பேரணி புதிய பேருந்து நிலையம், முதன்மைச் சாலை, சேது சாலை வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற 1000 ற்கும் மேற்ப்பட்ட மாணவ , மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனா். பேரணியில்   நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசியா் சி. ராணி, இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்க அலுவலா்  பேராசியா் நா.பழனிவேலு, பேராசிரியா்கள் முத்துகிருஷ்ணன், நித்திய சேகா், தேன்மொழி, அகல்யா, உமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து 

வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் தெய்வானை தலைமை வகித்தாா் . வாக்களிப்பதன் அவசியம், கடமை, உரிமை குறித்து மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு,யாருக்கு வாக்களித்தோம் என தெரிந்து கொள்ளும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

 நிகழ்ச்சியில் தோ்தல் துணை வட்டாட்சியா் யுவராஜ், மண்டல துணை வட்டாட்சியா் தா்மேந்திரா, திமுக நகரச் செயலாளா் என் .எஸ் .சேகா், வருவாய் ஆய்வாளா்கள் ஜெயதுரை, முருகேசன், யோகச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com