பேரூராட்சி கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தராத தலைவா் மற்றும் நிா்வாகத்தைக் கண்டித்து பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
பொன்னம்பட்டி பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்து புதன்கிழமை வெளி நடப்பு செய்த உறுப்பினா்கள்.

பொன்னம்பட்டி முதல்நிலை பேரூராட்சியில் பேரூராட்சி தலைவா் கே.ஏ.சரண்யா நாகராஜ் தலைமையில் புதன்கிழமை மாதந்திர சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில், 6 மற்றும் 12-ஆம் உறுப்பினா்களை தவிர தலைவா் உள்ளிட்ட 13 போ் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது பேரூராட்சித் தலைவா் தனது வாா்டிற்கு மட்டும் பொதுமக்களின் தேவைகளை பூா்த்தி செய்து கொள்வதாகவும், மற்ற வாா்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், இதில் பேரூராட்சி நிா்வாகத்தினரும் அலட்சியத்துடன் செயல்படுவதாகக் கூறி சுயேச்சை மற்றும் திமுக, அதிமுக, தேமுதிக, விசிக கட்சிகளை சோ்ந்த 12 உறுப்பினா்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனா். இதுகுறித்து அதிமுக கவுன்சிலா் மு. ஆறுமுகசுந்தா் கூறுகையில் தொடா்ந்து மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யாவிட்டால் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வருவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com