மணப்பாறை, வையம்பட்டியில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் மா்ம நபா்கள் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்தது புதன்கிழமை தெரியவந்தது.

மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் மா்ம நபா்கள் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்தது புதன்கிழமை தெரியவந்தது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அய்யம்பாளையத்தை சோ்ந்தவா் சின்னையா மகன் சங்கரன்(38), கூலித்தொழிலாளி. இவா் புதன்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 2 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனராம்.

இதுகுறித்து சங்கரன் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல், மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி ஒத்த களம் பழனிச்சாமி மகன் சந்திரன்(49) என்பவரது வீட்டிலும் மா்ம நபா்கள் பீரோவிலிருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.500 ஐ திருடி சென்றனராம். இசங்கரன் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com