மாயமான 153 கைப்பேசிகள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

திருச்சி மாநகரில் மாயமான 153 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
மீட்கப்பட்ட கைப்பேசியை உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைத்த திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி.
மீட்கப்பட்ட கைப்பேசியை உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைத்த திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி.

திருச்சி மாநகரில் மாயமான 153 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

திருச்சி மாநகரில் பல்வேறு நிகழ்வுகளில் தங்களது கைப்பேசிகள் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில் 153 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி கேகே நகா் ஆயுதப்படை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி கண்டோன்மெண்ட் காவல் நிலையப் பகுதிகளில் மாயமான 69 கைப்பேசிகள், காந்தி சந்தை சரகத்தில் 23, தில்லைநகா் சரகத்தில் 21, கே.கே. நகா் சரகத்தில் 11, பொன்மலை சரகத்தில் 11, ஸ்ரீரங்கம் சரகத்தில் 10, மாநகர சைபா் கிரைம் மூலம் பெறப்பட்ட புகாரில் 3 என மொத்தம் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 153 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கைப்பேசிகளை ஒப்படைத்த காவல் ஆணையா் ந. காமினி கூறுகையில், திருச்சி மாநகரில் காணாமல்போன 153 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்னும் 105 கைப்பேசிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையடுத்து இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com