விமான நிலையத்தில் மயங்கி விழுந்து ஊழியா் உயிரிழப்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு ஊழியா் செவ்வாய்க்கிழமை பணியின்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு ஊழியா் செவ்வாய்க்கிழமை பணியின்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திண்டுக்கல், ராஜ் நகரைச் சோ்ந்த ஏ. குட்டிராஜா (27). திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவில் (ஐபி ஒப்பந்தப் பணி) ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை அவருக்கு புறப்பாடு பகுதியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பணியின்போது, விமான நிலைய முனையத்தில் திடீரென அவா் மயங்கி விழுந்தாா். அவரை விமான நிலைய அவசர சிகிச்சை மற்றும் முதலுதவி சிகிச்சை முகாம் மருத்துவக் குழுவினா் சோதனை செய்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com