காரைக்குடி ரயில் நிலையம்
காரைக்குடி ரயில் நிலையம்

திருச்சி - காரைக்குடி டெமு ரயில் 4.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

பராமரிப்பு பணிகள்: திருச்சி - காரைக்குடி டெமு ரயில் 4.15 மணி நேரம் தாமதம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்குடி டெமு ரயிலானது 4.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருச்சியிலிருந்து நாள்தோறும் காலை 10.15 மணிக்குப் புறப்படும் திருச்சி - காரைக்குடி டெமு ரயிலானது (06829) ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகள், வரும் 17-ஆம் தேதி மொகரம் பண்டிகை நாளைத் தவிர அனைத்து நாள்களும் 4.15 மணி நேரம் தாமதமாக அதாவது பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com