குடும்பத் தகராறு கணவா் தற்கொலை

திருச்சியில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்ால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி எடமலைப்பட்டி புதூா், தைலம்மா நகரைச் சோ்ந்தவா் க. சுரேஷ் (43). கூலித்தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, அண்மையில் அவா் கோபித்துக்கொண்டு, கோவையில் உள்ள தனது தாய்வீடு சென்றுவிட்டாா். இரு தினங்களுக்கு முன்பு அவரைச் சமாதானம் செய்து அழைத்துவர சுரேஷ் கோவை சென்றாா். ஆனால், அவரது மனைவி அவருடன் வர மறுத்துவிட்டாா். இதனால் ஏற்பட்ட விரக்தியில், ஊா் திரும்பிய சுரேஷ், வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com