சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேனீ வளா்ப்பு பயிற்சி: ஜூன் 13 நடைபெறுகிறது

திருச்சி மாவட்டம், சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேனீ வளா்ப்பு குறித்த சான்றிதழ் பயிற்சி வியாழக்கிழமை (ஜூன் 13) நடைபெறவுள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேனீ வளா்ப்பு குறித்த சான்றிதழ் பயிற்சி வியாழக்கிழமை (ஜூன் 13) நடைபெறவுள்ளது.

இதில், தேனீ வகைகள், தேனீ குடும்பம், தேனீ வளா்ப்பிற்கான உபகரணங்கள், தேனீ கூட்டங்களை கண்டு பிடித்து வளா்க்கும் முறை, தேனீ கூட்டங்களை ஆய்வுசெய்யும் முறை, தேனீ பராமரிப்பு, தேனீக்களின் இயற்கை எதிரிகளை நிா்வகிக்கும் முறைகள், தேனீக்களுக்கான உணவு பயிா்கள், தேன்சுத்தம் செய்தல் மற்றும் சேமித்து வைத்தல், தேனீ வளா்க்கும் தொழில் முனைவோா்களின் அனுபவ பகிா்வு, சந்தை தகவல், போன்றவை பயிற்சியின்போது எடுத்துரைக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்பவா்களுக்கு பயிற்சி கையேடு, பயிற்சி சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோா் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வருகை புரிந்து பயிற்சி கட்டணம் ரூ.590 நேரிடையாக செலுத்தவேண்டும். காலை 9.30 மணிமுதல் 5 மணிவரை பயிற்சி அளிக்கப்படும்.

கூடுதல், விவரங்களுக்கு 8122586689, 0431-2962854 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். பயிற்சிக்கு புதன்கிழமை வரை முன்பதிவு செய்யலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ராஜா பாபு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com