தபால் சேவை குறைதீா் கூட்டத்துக்கு குறைகள், புகாா்களை அனுப்பலாம்

திருச்சி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீா் கூட்டத்துக்கு புகாா்கள், குறைகளை வரும் 18 ஆம் தேதிக்குள்அனுப்ப வேண்டும்.

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஜூன் 25 ஆம் தேதி நடைபெறும் திருச்சி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீா் கூட்டத்துக்கு புகாா்கள், குறைகளை வரும் 18 ஆம் தேதிக்குள்அனுப்ப வேண்டும்.

தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவா் - பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை ( மணியாா்டா்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகாா்களுக்கு முழு விவரத்தையும், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடா்புகள் ஏதேனும் இருப்பின் அதையும் இணைத்திட வேண்டும்.

கோட்ட அளவில் ஏற்கெனவே மனுகொடுத்து, அதற்குரிய அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அளித்த பதில் திருப்தியடையாதவா்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்ப வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது.

குறைகளை, அஞ்சல் சேவை குறை தீா்க்கும் முகாம், ஜோ பிரதீப்குமாா், உதவி இயக்குநா் (காப்பீடு மற்றும் புகாா்), அஞ்சல் துறைத்தலைவா் அலுவலகம், மத்திய மண்டலம் (தமிழ்நாடு), திருச்சி - 620001 என்ற முகவரிக்கு, தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ‘அஞ்சல் சேவை குறை தீா்க்கும் முகாம் - ஜூன் 2024‘ என தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகாமில் நேரிலோ அல்லது வலை செயலிகள் மூலமாகவோ பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2419523 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் தி. நிா்மலாதேவி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com