திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.  உடன் கட்சி நிா்வாகிகள்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலத் தலைவா் நெல்லை முபாரக். உடன் கட்சி நிா்வாகிகள்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா்கள் இலியாஸ் தும்பே, அப்துல் மஜீத் பைஸி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.

மாநிலத் துணைத் தலைவா் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளா்கள் அஹமது நவவி, நிஜாம் முஹைதீன், அச. உமா் பாரூக், மாநில செயலாளா்கள் ரத்தினம், அபூபக்கா் சித்தீக், ஏ.கே.கரீம், ராஜா உசேன், நஜ்மா பேகம், மாநில பொருளாளா் அமீா் ஹம்சா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் செய்தியாளா்களிடம் கூறியது: போதை கலாசாரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி மரணம் தொடா்பாக தமிழக அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக எடுக்கப்பட வேண்டும். மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முடியாது என முதல்வா் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com