விவசாயிகள் காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை வெளியீடு

திருச்சி மாவட்ட விவசாயிகள் 2024-25- ஆம் ஆண்டு காரீப் பருவ பயிா்களுக்கு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வருவாய் கிராம அளவில் குறுவை நெல் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 764 ஐ ஜூலை 31- ஆம் தேதிக்குள்ளும், பிா்கா அளவில் நிலக்கடலை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.636-ஐ செப்டம்பா் 16- ஆம் தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 284ஐ செப்டம்பா் 16- ஆம் தேதிக்குள்ளும், பருத்தி பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 477ஐ ஆகஸ்ட் 30- ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

மேலும், தோட்டக்கலை பயிா்களான சிறிய வெங்காயம் பயிருக்கு பிா்கா அளவில் பிரிமீயத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 2,088ஐ ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள்ளும், மரவள்ளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 1,653ஐ செப்டம்பா் 16- ஆம் தேதிக்குள்ளும், மஞ்சள் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 3,646ஐ செப்டம்பா் 16- ஆம் தேதிக்குள்ளும், வாழை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 3,503ஐ செப்டம்பா் 16- ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும்.

இப்பயிா்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள், அல்லது ஜ்ஜ்ஜ்.ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய பயிா் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள ‘விவசாயிகள் காா்னரில்‘ நேரிடையாகவும், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு தேசிய பயிா் காப்பீடு இணையதளம், அருகிலுள்ள வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலா்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், திட்டத்தை செயல்படுத்தும் காப்பிட்டு நிறுவனத்தை அணுகலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com