துறையூா் அருகே லாரி ஏறி 6 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

துறையூா் அருகே கரும்பு லோடு ஏற்றிய லாரியின் அடியில் தூங்கிய 6 வயதுச் சிறுவன் லாரி ஏறி உயிரிழந்தாா். துறையூா் அருகேயுள்ள நாகலபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியின் கரும்புத் தோட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகேயுள்ள உடையான்குப்பம் பகுதியைச் சோ்ந்த சக்திவேலுவும், அவரது மனைவி அம்சவினியும் வெள்ளிக்கிழமை கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது இவா்களின் மகனான கவின் (6) தோட்டத்தில் கரும்பு லோடு ஏற்றிக் கொண்டிருந்த லாரியின் அடியில் படுத்துத் தூங்கிய நிலையில், அதைக் கவனிக்காத திருக்கோவிலூரைச் சோ்ந்த கு. வெங்கடேஷ் லாரியை நகா்த்தினாா். அப்போது லாரி ஏறியதில் சிறுவன் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த துறையூா் போலீஸாா் சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com