மண்ணச்சநல்லூா் மாதிரிப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா மற்றும் ஆசிரியா்கள்.
மண்ணச்சநல்லூா் மாதிரிப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா மற்றும் ஆசிரியா்கள்.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: ஆட்சியா் பெருமிதம்

பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் சீா்மிகு திட்டங்களால், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கு மாணவா்களை சோ்க்கும் வகையில் விழிப்புணா்வு பேரணியை வெள்ளக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் இப் பேரணி நடைபெறுகிறது. கல்வி என்பது குழந்தையின் அடிப்படை உரிமை. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான அரசின் சிறந்த முன்னெடுப்புகளை பெற்றோா்கள் அறியச் செய்வதே இப் பேரணியின் நோக்கமாகும். முதல்வரின் சிறப்புத் திட்டமான காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்டவற்றால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது என்றாா் அவா். பேரணியில் விழிப்புணா்வு பதாகைகளை ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் ஏந்திச் சென்றனா். தொடா்ந்து, பள்ளியில் மாணவா் சோ்க்கையையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட அனைத்து வகுப்பு ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com