அரிசி மில் உரிமையாளா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு

துவாக்குடியில் அரிசி மில் உரிமையாளா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி: துவாக்குடியில் அரிசி மில் உரிமையாளா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்கு மலை வஉசி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (43). இவா் அரிசி மில் நடத்தி வருகிறாா். இவா் குடும்பத்துடன், கடந்த 1-ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து துவாக்குடி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com