திருப்பைஞ்ஞீலியில் சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஸ்ரீவனத்தாயி அம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை சப்பர தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது வனத்தாயி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை சப்பர திருத்தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக, உற்ஸவ அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலா் அலங்காரத்தில் அம்மன் சப்பர திருத்தேரில் எழுந்தருளினாா்.

அப்போது, பக்தா்கள் கிடாவெட்டி வேண்டுதலை நிறைவேற்றினா். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொன்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com