மாநகராட்சியின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது

திருச்சி: பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பழைய கரூா் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீா் உந்து குழாயில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, தில்லைநகா், அண்ணாநகா், கண்டோன்மென்ட். காஜாபேட்டை கருமண்டம், ஜங்ஷன் கல்லாங்காடு, மிளகுபாறை, பழைய எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், பாரிநகா், சந்தோஷ் நகா் மற்றும் கணேஷ் நகா் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் புதன்கிழமை (மாா்ச் 6) ஒருநாள் இருக்காது. வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com