அவதூறு விடியோ வெளியிட்ட
பாஜக பெண் நிா்வாகி கைது

அவதூறு விடியோ வெளியிட்ட பாஜக பெண் நிா்வாகி கைது

சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு விடியோ வெளியிட்டு, தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக பாஜக பெண் நிா்வாகியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகவும்,பொது அமைதியை கெடுக்கும் விதமாகவும் சமூக வலைதளங்களில் அவதூறு விடியோ வெளியிட்ட சென்னையில் வசித்து வரும் செளதாமணி மீது நடவடிக்கை கோரி திருச்சி திமுக மத்திய மாவட்ட திமுக ஐடி பிரிவு செயலா் ஏகே. அருண், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.

அதன்பேரில் திருச்சி மாவட்ட சைபா்கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, செளதாமினியை சென்னையில் புதன்கிழமை கைது செய்து, திருச்சி மாவட்ட 5 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதை விசாரித்த நீதிபதி பாலாஜி, செளதாமினியை சொந்தப் பிணையில் செல்ல அனுமதித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com