பட்டா மாற்றம் கோரி ஆட்சியரிடம் மனு

பட்டாவை மாற்றித் தரக் கோரி அணைக்கரை பொதுமக்கள் ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் மேலூா், அணைக்கரை பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் கொடுத்த மனு : எங்கள் பகுதியில் நாங்கள் வீட்டு மனை நிலம் பட்டா, சிட்டா, அடங்கல் வரைபடத்தில் பெயா் சோ்த்தல், சரியான அளவிடல், சரியான சா்வே எண் உள்ளிட்ட ஆவணங்கள் மூலமாக கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிக்கிறோம்.

இப்பகுதியில் உள்ள சுமாா் 1000 வீடுகளில் சுமாா் 2500 போ் உள்ளனா். மேலும் அனைத்து வரிகளையும் கட்டி வருகிறோம். இந்நிலையில் எங்கள் நிலம், வீடு, வீட்டின் பின்புறம் உள்ள, காலிமனைகள் குறித்த பதிவேடுகளில் தனியாா் தோப்பு மற்றும் அரசு நிலம் (பிரைவேட் தோப்பு - சா்க்காா் மனை) என்று உள்ளது. அதை நகர நத்தம் நிலவரித் திட்டம் மற்றும் ரயத்துவாரியாக மாற்றி பட்டா வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com