பொறியியல் பணிகள்: திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பதி - மன்னாா்குடி விரைவு ரயிலானது (17407) வரும் 10, 12, 14 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக மன்னாா்குடி - திருப்பதி விரைவு ரயிலானது (17408) வரும் 11, 13, 15 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி - திருப்பதி மெமு ரயிலானது (16112) வரும் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலும், மறுமாா்க்கமாக திருப்பதி - புதுச்சேரி மெமு ரயிலானது (16111) வரும் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com