லால்குடி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இடிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் இடித்து அகற்றினா். நகராட்சி எல்லைக்குட்பட்ட பூவாளூா் சாலையில் சாந்தி நகா் அருகே சா. அம்ஜத்கான் என்பவா் நகராட்சி அனுமதியின்றி 9 கடைகளை கட்டியிருந்தாராம்.

இதையடுத்து இந்தக் கடைகளை அகற்றக் கோரி உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவா் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அந்தக் கடைகளை அதன் உரிமையாளரே அகற்றிக் கொள்ள கால அவகாசம் கொடுத்தும், கடைகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் அந்தக் கடைகளை லால்குடி நகராட்சி ஆணையா் குமாா், நகராட்சி பொறியாளா் வெங்கட்ராமன், நகரமைப்பு ஆய்வாளா் ஜெய்சங்கா், துப்புரவு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி பணியாளா்கள் ஆகியோா் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் செவ்வாய், புதன்கிழமைகளில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com