மக்காச்சோள சாகுபடி பண்ணைப் பள்ளி

துறையூா் வட்டார வேளாண்மை தொழிநுட்ப மேலாண்மை முகமை சாா்பில் கொல்லப்பட்டி கிராமத்தில் மக்காச்சோள சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ரவி தலைமை வகித்தாா். மண்ணச்சநல்லூா் விதை சான்று அலுவலா் ரமேஷ், கண்ணனூா் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் கமலேஸ்வரன், உதவி வேளாண்மை அலுவலா் மனோகரன் உள்ளிட்டோா் பண்ணைப் பள்ளியில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனா். இதில் துறையூா் வட்டத்தைச் சோ்ந்த 25 விவசாயிகள் மற்றும் களப்பணிக்கு வந்த பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் பங்கேற்றனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் அன்பழகன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சரவணன், சரண்யா ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். பண்ணைப் பள்ளியின் நடவடிக்கைகளைக் கண்டும், கேட்டும், கலந்துரையாடல் செய்து பயிற்சி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com