முசிறியில் சாரணீய அமைப்பின் பயிற்சி மையக் கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரத சாரண - சாரணீய இயக்கம் மாவட்ட பயிற்சி மையம் புதிய கட்டிடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பெரம்பலூா் மக்களவை உறுப்பினரின் உள்ளூா் வளா்ச்சி திட்டம் 2019 - 20 திட்டத்தின் கீழ் முசிறி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நேரு பூங்கா திடலில் ரூ.27 லட்சத்தில் பாரத சாரண சாரணீய இயக்கம் மாவட்ட பயிற்சி மைய புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதை பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் டி.ஆா். பாரிவேந்தா் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். நிகழ்வில், முசிறி கல்வி மாவட்ட கல்வி அலுவலா் மதியழகன், ஐ.ஜே. கே. மாவட்டத் தலைவா் கருணாகரன், மாவட்டச் செயலா் தண்டபாணி, முசிறி ஒன்றியத் தலைவா் தமிழ்ச்செல்வன், சாரண சாரணீய மாவட்டச் செயலா் ஜெயமூா்த்தி, அமைப்பு ஆணையா்கள் திருமலை, நாகராஜன், பயிற்சி ஆணையா் சலீம், முதுகலை ஆசிரியா் புஷ்பராஜ், ஆசிரியா் ஆசிரியைகள் மற்றும் சாரண - சாரணீய மாணவ மாணவிகள் பங்கேற்றிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com