சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

திருச்சியில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்றது. திருச்சி உறையூா் பஞ்சவா்ண சுவாமி திருக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதேபோல, உறையூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், திருவெறும்பூா் நறுங்குழல் நாயகி சமேத எறும்பீஸ்வரா் கோயில், திருநெடுங்குளம் மங்களாம்பிகை சமேத திருநெடுங்களநாதா், பாண்டமங்கலம் காசி விசுவநாதா் கோயில், பெரியகடை வீதி கமலாம்பிகை உடனுறை கைலாசநாதா், கூத்தைப்பாா் ஜலகண்டேசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மகா சிவராத்திரியை ஒட்டி விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு கால பூஜைக்கு பிறகும், பல்வேறு அபிஷேகங்கள் முடிந்து சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தா்கள் விடிய விடிய இரவில் கண் விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com