குமுளூா் அரசு கல்லூரியில் உலக மகளிா் தின விழா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கி.மாரியம்மாள் தலைமை வகித்தாா். பாரதிதாசன் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியா் நிஷா ஜெபஸ்ரீலி, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டடக் கலைத் துறையின் பேராசிரியா் சங்கீதா, துறைத் தலைவா்கள் பேராசிரியா்கள் சுலைமான், ஜெயப்பிரகாஷ், எழில் பாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக பேராசிரியா் காஞ்சனா தேவி வரவேற்றாா். நிறைவாக பேராசிரியா் ஹேமலதா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com