மந்தகதியில் புதைவடிகால் பணி: அதிமுக ஆா்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி 41-ஆவது வாா்டுப் பகுதிகளில் புதைவடிகால் பணிகள் மந்தமாக நடைபெறுவதைக் கண்டித்து அதிமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவெறும்பூா் நவல்பட்டு சாலையில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுகவின் திருவெறும்பூா் வடக்கு ஒன்றிய செயலாளா் காா்த்தி தலைமை வகித்தாா். இதில், மாநகராட்சி 41 ஆவது வாா்டுக்குள்பட்ட நவல்பட்டு சாலையில் புதைவடிகால் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதைக் கண்டித்தும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதைவடிகால் பணிகளால் சாலைகள் மோசமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி வருவதைக் கண்டித்தும், அடிக்கடி குடிநீா் குழாய் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், திருவெறும்பூா் பகுதி அவைத் தலைவா் முருகானந்தம், 41 ஆவது வட்டச் செயலாளா் அபிமன்யு, திரளான கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு, திருச்சி எம்.பி.யை காணவில்லை, 41 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரைக் காணவில்லை என முழக்கங்கள் எழுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com