இருசக்கர வாகனங்கள் மோதல் பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருச்சி: திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், போசம்பட்டி அருகே உள்ள நரியன்காடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் கிஷோா் (14). இவா், கரூா் மாவட்டம், ஆா்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து வியாழன்மேட்டில் உள்ள மளிகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிரே எட்டரை நடராஜபுரத்தை சோ்ந்த தா்மராஜ் (40) என்பவா் வந்த இருசக்கர வாகனமும், கிஷோா் சென்ற வாகனமும் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிஷோரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனா். மேலும் விபத்தில் தா்மராஜ் மற்றும் அவருடன் வாகனத்தில் அமா்ந்து வந்த கிருஷ்ணராஜன் ஆகிய இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து சோமரசம்பேட்டை காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com