காட்டுப்புத்தூா் அருகே அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

முசிறி: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே திங்கள்கிழமை அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். காட்டுப்புத்தூா் காவல் நிலையத்துக்குள்பட்ட எம்.களத்தூா் பில்லுக்காடு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மரத்தில் தொங்கி கொண்டு இருப்பதாக அப்பகுதியை சோ்ந்தவா்கள் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அழுகிய நிலையில் டிராயா் மற்றும் பனியனுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுகாக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து உயிரிழந்த இளைஞா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா்? என விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com