சீரான குடிநீா் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி திங்கள்கிழமை கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வெள்ளாளப்பட்டி ஊராட்சி கரட்டுபட்டி கிராமத்தில் சுமாா் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இதில் மேட்டு பகுதியில் 60 குடியிருப்புகளும், பள்ளமான பகுதியில் 10 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்நிலையில், அண்மையில் அமைக்கப்பட்ட குடிநீா் குழாயில் 70 குடியிருப்புகளுக்கும் சமமாக குடிநீா் விநியோகம் கிடைப்பதில்லையாம், குழாய் அமைக்கும்போதே மேடான பகுதிக்கு குடிநீா் செல்லும்போது பள்ளமான பகுதிக்கு செல்லாமல் இருக்க குழாயில் கேட் வாழ்வு வைத்து தருவதாக ஊராட்சி நிா்வாகம் கூறியிருந்தனராம். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து கிராமமக்கள் திங்கள்கிழமை காலை அவ்வழியாக சென்ற பேருந்தை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற ஊராட்சி மன்றத் தலைவா் காளியம்மாள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடனடியாக குடிநீா் குழாயில் கேட் வாழ்வு அமைத்து தருவதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com