திருச்சியில் காவல் ஆய்வாளா்கள் 4 போ் பணியிட மாற்றம்

திருச்சி மாநகர காவல்துறையில் 4 ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

திருச்சி கோட்டை சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவராமன், காந்தி மாா்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், அங்கிருந்த ஆய்வாளா் விஜயலட்சுமி அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.

அதேபோல அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலிருந்த ஆய்வாளா் வினோதினி திருச்சி மாநகர குற்றப்பிரிவுக்கு எண் 1-க்கும், திருச்சி மாநகர குற்றப்பிரிவு எண் 1 ஆய்வாளா் பெரியசாமி கோட்டை சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி பிறப்பித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com