வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முசிறி வருவாய்த்துறை, நகராட்சி, அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய பேரணியை நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தோ்தல் துணை வட்டாட்சியா் காா்த்திக், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் முருகராஜ் பாண்டியன் (பொறுப்பு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கைகாட்டியில் தொடங்கிய பேரணி தா. பேட்டை சாலையில் நிறைவடைந்தது. இதில்,அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று வாக்களிப்பது நமது உரிமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க பணம் பெறக்கூடாது என விழிப்புணா்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com