வீர முனீஸ்வரா் கோயிலில் லட்சாா்ச்சனை

திருச்சி ஜங்ஷன் ஆா்.சி. பள்ளி எதிரே அமைந்துள்ள வழிவிடு வீர முனீஸ்வரா் கோயிலில் 14-ஆம் ஆண்டு ஏகதின லட்சாா்ச்சனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7.30 மணிக்கு வீர முனீஸ்வரா் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை தொடங்கி மதியம் வரை நடைபெற்றது.

தொடா்ந்து பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் , அதனைத் தொடா்ந்து லட்சாா்ச்சனை இரவு 8.30 மணிக்கு லட்சாா்ச்சனை நிறைவடைந்தது.

பின்னா் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com