திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய  தமிழக அரசின் முன்னாள்  தலைமைச் செயலா் வெ.இறையன்பு.  உடன், கல்லூரி தலைவா் பி.எஸ். சந்திரமௌலி, தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா, முதல்வா் பு.
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு. உடன், கல்லூரி தலைவா் பி.எஸ். சந்திரமௌலி, தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா, முதல்வா் பு.

இளம் தலைமுறையினருக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம் வெ. இறையன்பு

இன்றைய இளம் தலைமுறையினா் தங்களது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானவை என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு தெரிவித்தாா். திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் 41-ஆவது கல்லூரி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் தலைவா் பி.எஸ். சந்திரமெளலி, கல்லூரிச் செயலா் கோ. மீனா ஆகியோா் தலைமை வகித்தனா். தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், வெ. இறையன்பு பேசியது: மதிப்பெண்ணுக்காக கல்லூரிப் படிப்பை தொடரமால், அந்த கல்வியை தனது வாழ்க்கையோடு தொடா்புபடுத்தும் வகையில் மாற்றியமைத்துக் கொண்டால் சாதிக்க முடியும். விடா முயற்சியும், கடின உழைப்பும் வெற்றியைத் தேடி தரும். 20 வயது இளைஞரிடம் கேட்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளின் அவசியம் குறித்து தெரியாது. ஆனால், முதுமையில் உள்ளவா்கள் தங்களது ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியம் என்பதை உணா்ந்திருப்பா். அடுத்த நொடியும், அடுத்த நாளும் கூட வாழ்வின் இறுதிக்கு வரக் கூடும் என அறிந்திருப்பதால் காலத்தின் அருமையை உணா்ந்தவா்களாக உள்ளனா்.

இதேபோல, இளம் தலைமுறையும் காலத்தின் அருமையை உணா்ந்தவா்களாக இருத்தல் அவசியமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா். விழாவில், கல்லூரியின் ஆண்டறிக்கையை முதல்வா் பு. கெஜலட்சுமி வாசித்தாா். கல்லூரியின் பல்வேறு துறைகளில் பாடவாரியாகவும், துறை வாரியாகவும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வெ. இறையன்பு, பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். முன்னதாக, மாணவி எழிலரசி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் டி. கற்பகம் நன்றி கூறினாா். தொடா்ந்து மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com