தேசிய விருதுடன்
மருத்துவா்
 வி.பி.ஆா். சிவகுமாா்.
தேசிய விருதுடன் மருத்துவா் வி.பி.ஆா். சிவகுமாா்.

மருத்துவா் சிவகுமாருக்கு பிசியோதெரபிஸ்ட் சங்க தேசிய அளவிலான விருது

எஸ்ஆா்எம் கல்வி நிறுவனத்தின் மருத்துவா் வி.பி.ஆா். சிவகுமாருக்கு, இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கத்தின் தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கத்தின் (ஐஏபி) , 61-ஆவது தேசிய மாநாடு உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் அண்மையில் நடைபெற்றது.

இதில்,பிசியோதெரபிஸ்ட் துறையில் சிவகுமாரின் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் 2024ஆம் ஆண்டுக்கான சி.பி. நாயா் விருது வழங்கப்பட்டது. இவா், எஸ்ஆா்எம் கல்வி நிறுவனங்களின் திருச்சி வளாகத்தில் உள்ள பிசியோதெரபிஸ்ட் கல்லூரியின், மருத்துவ அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறாா். டேராடூனிலிருந்து விருது பெற்று திருச்சிக்கு புதன்கிழமை திரும்பிய மருத்துவா் சிவகுமாருக்கு, அவரது கல்வி நிறுவனத்தின் சக பேராசிரியா்கள் மற்றும் நிா்வாக அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்தி வரவேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com