திருச்சியில்  ரூ.24.30 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ள கொல்லாங்குளம் .
திருச்சியில் ரூ.24.30 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ள கொல்லாங்குளம் .

ரூ. 24.30 கோடியில் கொல்லாங்குளத்தை மேம்படுத்தும் பணி தொடக்கம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொல்லாங்குளத்தை ரூ.24.30 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட எடமலைப்பட்டி புதூா், கருமண்டபம் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது கொல்லாங்குளம். சுமாா் 55 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த குளத்துக்கு எடமலைப்பட்டிபுதூா், கருமண்டபம், கே.கே. நகா், ஓலையூா், பஞ்சப்பூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்துவரும் மழைநீரே நீராதாரம். இந்த குளத்தை மேம்படுத்தும் பணிகளை மூன்று கட்டமாக மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

மூலதன மான்ய நிதியின் கீழ், எடமலைப்பட்டிபுதூரில் 57, 58-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக ரூ.8.92 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன. இதன் தொடா்ச்சியாக இதே பகுதியில் இரண்டாவது கட்டமாக ரூ.6.47 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், கருமண்டபம் பகுதியில் 56-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் ரூ.8.91 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், குளத்தின் கரைகள் பலப்படுத்துதல்ப்பட்டு நடைபாதை அமைக்கப்படுகிறது. பாா்வையாளா்கள் அமரும் பகுதிகள், பாதசாரிகள் நடைபயணம் மேற்கொள்ள தனி வசதி, சைக்கிள் ஓட்டும் தளம், மீன்பிடி தளம் அமைத்தல், பக்கவாட்டு தடுப்புச்சுவா், திறந்தவெளி அரங்கம், தடுப்புவேலி, கண்காணிப்புக் கோபுரம், அணுகு சாலை, காட்சி முனையம், அடா்வனக் காடுகள் உருவாக்கம், கழிப்பறைகள், குடிநீா் வசதிகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், முதியோா் அமரும் இருக்கைகள் உள்ளிட்டட பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. இந்தப் பணிகளை 2 ஆண்டுகளுக்கு முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கு அமைச்சா்கள் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். 2026-ஆம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருச்சி மாநகராட்சியின் தூய்மை இயக்கத்தின் தூதுவரும், மருத்துவருமான எம்.ஏ. அலீம் கூறுகையில், கொல்லாங்குளத்தை மேம்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது. இதன் மூலம், மாநகர மக்களுக்கு சுகாதாரமான, தூய்மையான காற்று கிடைக்கவும், பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கியத்துக்கு அடித்தளமாக அமையும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com