உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி பூத்தட்டுகளுடன் பங்கேற்ற பக்தா்கள்.
உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி பூத்தட்டுகளுடன் பங்கேற்ற பக்தா்கள்.

உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் அா்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காலையில் கோயில் சாா்பில் அறநிலையத்துறை உதவி ஆணையா் சரவணன் தலைமையில் கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் பல்வேறு விதமான பூக்களை தட்டுகளில் ஏந்தி ஊா்வலமாக வந்து, அம்மனுக்கு சாற்றினா். பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உறையூா் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் தாம்பூல தட்டுகள், கூடைகளில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com