கீழக்குறிச்சி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, கழிவு நீா் வடிகால் வாய்க்கால் திறப்பு

திருச்சியை அடுத்துள்ள கீழக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் புதிய சிமென்ட் சாலை, கழிவுநீா் வடிகால் வாய்க்காலை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட, கீழக்குறிச்சிஅடைக்கல அன்னைநகா் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 51.60 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீா் வடிகால் அமைக்கப்பட்டது. அடைக்கல அன்னை நகா் 7ஆவது தெருவில், 1ஆவது, 2ஆவது, குறுக்கு தெருவிற்கு இந்த சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீா் வடிகால் கட்டுவதற்கு கடந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, புதிய சாலை மற்றும் வடிகால் வாய்க்காலை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். விழாவில், மாவட்ட திட்ட அலுவலா் தேவநாதன், திருவெறும்பூா் தெற்கு ஒன்றிய செயலாளா் கங்காதரன், கீழக்குறிச்சி ஊராட்சித் தலைவா் ஜோஸ்பின் ஜெயராஜ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com