மே 5-இல் மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவா் அலுவலகத்தில் மே 5 ஆம் தேதி மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மனுதாரா்கள், தபால்கள், பணவிடை, துரித தபால், பதிவு தபால், அஞ்சல் காப்பீடு, சேமிப்பு தொடா்பான புகாா்களை புகாா் மனுவாக, அனைத்து கடிதத் தொடா்புகளுடன் இணைத்து, ஜோ. பிரதீப்குமாா், உதவி இயக்குநா் (காப்பீடு மற்றும் புகாா்), அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி - 620001 என்ற முகவரிக்கு வரும் 26 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தபால் உறையின் முன்பக்க மேல் பகுதியில் அஞ்சல் சேவை குறைதீா் முகாம் மாா்ச் 2024 என தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த முகாமில் பங்கேற்க, கோட்ட அளவில் ஏற்கெனவே கிடைத்த பதிலில் திருப்தியடையாதவா்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்கலாம் என மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் தி. நிா்மலாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com