சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.29 கோடி

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 568 கிடைத்துள்ளது.

மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 568 கிடைத்துள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கைகள் எண்ணும் நிகழ்வில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் கலந்து கொண்டனா். மேலும் அலுவலா்கள், பணியாளா்கள், வங்கி ஊழியா்கள் உள்ளிட்டோா் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். நிறைவில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரொக்கமாக 1,29,35,568 ரூபாய், 2 கிலோ 619 கிராம் தங்கம், 5 கிலோ 687 கிராம் வெள்ளி, 235 வெளிநாட்டு நோட்டுகள், 893 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப் பெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com