சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலா் மகாமணி
சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலா் மகாமணி

சாலை விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

கோயம்புத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரிந்த தலைமை காவலா் சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தொட்டியத்தைச் சோ்ந்தவா் மகாமுனி (45). இவா் முசிறி காவல்துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தாா். பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்த அவா், கடந்த சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலனூா் பகுதியில் பாத யாத்திரையாக சென்றபோது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். உடன் சென்றவா்கள் அவரை மீட்டு, கோயம்புத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். அவரது உடல் தொட்டியத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com