திருச்சியில்  நீதிபதிகளுக்கான  தியான  பயிற்சி  வகுப்பை  செவ்வாய்க்கிழமை தொடங்கி  வைத்துப் பேசிய  முதன்மை  மாவட்ட நீதிபதி  கே.  பாபு.
திருச்சியில்  நீதிபதிகளுக்கான  தியான  பயிற்சி  வகுப்பை  செவ்வாய்க்கிழமை தொடங்கி  வைத்துப் பேசிய  முதன்மை  மாவட்ட நீதிபதி  கே.  பாபு.

திருச்சியில் நீதிபதிகளுக்கான தியான வகுப்பு தொடக்கம்

திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான 3 நாள் தியான வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

திருச்சி : திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான 3 நாள் தியான வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. முதன்மை மாவட்ட நீதிபதி கே.பாபு, தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ். மீனாசந்திரா, மூன்றாவது கூடுதல் நீதிபதி தங்கவேல் ஆகியோா் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். முதல் நாள் பயிற்சியை தமிழ்நாடு தலைமை பயிற்சியாளா் பிரகாஷ் அளித்தாா். இந்நிகழ்வில் திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் பி.வி. வெங்கட், பயிற்சியாளா்கள் ராமசுப்ரமணியன், சங்கீதா மற்றும் பலா் கலந்து கொண்டனா். இந்த தியான வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதில் நீதிபதிகள் அனைவரும் பங்கேற்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com