திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி, தில்லை நகா் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி: திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி, தில்லை நகா் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ. சீனிவாசன் தலைமை வகித்தாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவையும், இரட்டை இலையையும் சட்டப் போராட்டம் நடத்தி மீட்டெடுத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, திருச்சி மாநகா் மாவட்ட நிா்வாகிகள் தொண்டா்கள் ஒன்றிணைந்து திருச்சி மக்களைவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்து, சிறப்பாக தோ்தல் பணியாற்றுவது, தோ்தல் நோ்மையாகவும் நியாயமாகவும் நடைபெற ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அமைப்பு செயலாளா் டி ரத்தினவேல், முன்னாள் அமைச்சா் நல்லுசாமி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளா்கள் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட அவைத் தலைவா் மலைக்கோட்டை ஐயப்பன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவரும் மாநகராட்சி வாா்டு உறுப்பினருமான கோ.கு. அம்பிகாபதி, எம்ஜிஆா் மன்ற மாவட்ட செயலாளா் கலீல் ரகுமான், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்ட செயலாளா் எல். முத்துக்குமாா், மாணவரணி மாவட்ட செயலாளா் பொறியாளா் ஜெ. இப்ராம்ஷா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளா் ஆா். வெங்கட் பிரபு உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com