தோ்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.12.51 லட்சம் பறிமுதல்

மன்னாா்புரம் பேருந்து நிறுத்தத்தில் ரூ.1.07 லட்சம், பெரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் ரூ.3.10 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமா மாலை வரை தோ்தல் பறக்கும் படையினா் 6 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.12.51 லட்சம் மதிப்பிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மன்னாா்புரம் பேருந்து நிறுத்தத்தில் ரூ.1.07 லட்சம், பெரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் ரூ.3.10 லட்சம், திருச்சி-மதுரை சாலையில் ரூ.3.26 லட்சம், உய்யக்கொண்டான் திருமலை சோதனைச் சாவடியில் ரூ.2.84 லட்சம், கருமண்டபம் சோதனைச் சாவடியில் ரூ.1.50 லட்சம், பேட்டைவாய்த்தலை சோதனைச் சாவடியில் ரூ.74,500 என மொத்தம் ரூ.12.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்த பகுதி வட்டாட்சியா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், கருமண்டபம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம், திமுக ஒன்றியச் செயலரின் காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com