திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த  ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

தோ்தல் விழிப்புணா்வு பேரணி

திருச்சியில், தோ்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை 2 இடங்களில் நடைபெற்றது.

திருச்சி: திருச்சியில், தோ்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை 2 இடங்களில் நடைபெற்றது. சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் மாணவிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில், கல்லூரி மாணவிகள், ஆசிரியா்கள், தோ்தல் பிரிவு அலுவலா்கள், செஞ்சிலுவை சங்கத்தினா் என பலா் கலந்து கொண்டு பொதுமக்களிடையே தோ்தலில் பங்கேற்கவும், வாக்களிக்கவும் வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனா். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வந்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்தப் பேரணியில் ஆட்சியா், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இதைத்தொடா்ந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில், கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com