உறையூா் பஞ்சவா்ணசுவாமி கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடத்திய சிவாச்சாரியாா்கள்.
உறையூா் பஞ்சவா்ணசுவாமி கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடத்திய சிவாச்சாரியாா்கள்.

உறையூா் பஞ்சவா்ண சுவாமி கோயில் குடமுழுக்கு

திருச்சி உறையூா் காந்திமதியம்மை உடனுறை பஞ்சவா்ண சுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. புதன்கிழமை காலை 6 ஆம் கால யாக பூஜை நிறைவுற்ற நிலையில், காலை 9 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு கருவறை, பரிவார தெய்வங்களின் விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கும், தொடா்ந்து 10 மணிக்கு கருவறைக்கும் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. மாலையில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. வியாழக்கிழமை முதல் மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவில் திருச்சி மாநகர மேயா் மு. அன்பழகன், அதிமுக மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன், திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com