பேருந்து நிலையத்தில் நகை பறித்தவா் கைது

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை சாா்லஸ் நகரை சோ்ந்தவா் சேகா் மனைவி ராஜேஸ்வரி (56).

அண்மையில் திருச்சி வந்த இவா் மத்திய பேருந்து நிலையத்தில் நடந்து சென்றபோது மா்ம நபா் திடீரென அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா். புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த ஒரு நபரை போலீஸாா் பிடித்து நடத்திய விசாரணையில், அவா் திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஏஆா்எஸ் நகரைச் சோ்ந்த ரெனால்டு (42) என்பதும் ராஜேஸ்வரியின் நகையை பறித்துச் சென்றவா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நகையை மீட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com