முசிறி தலைமை காவலா் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

சாலை விபத்தில் செவ்வாய்க்கிழமை இறந்த முசிறி தலைமைக் காவலரின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தலைமைக் காவலராக இருந்தவா் தொட்டியத்தை அடுத்த தோளூா்ப்பட்டி கிராமத்தை சோ்ந்த கா. மகாமுனி (45). பழனி கோயிலுக்கு பாதயாத்திரையாக ஒட்டன்சத்திரம் அருகே இவா் நடந்து சென்றபோது இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இதையடுத்து இவரது சடலம் முசிறியில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முசிறி காவிரியாற்றுப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின்பேரில், முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் யாஸ்மின் தலைமையில் ஆயுதப்படையை சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் உட்பட 13 காவலா்கள் மூலம் 30 குண்டுகள் முழங்க தலைமைக் காவலா் மகாமுனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com