அரசுப் பேருந்து கவிழ்ந்து 20 போ் காயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட 20 போ் காயமடைந்தனா். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடி வழியாக நத்தமாங்குடிக்குச் சென்றுவிட்டு திரும்பிவந்த அரசுப் பேருந்து மேட்டுப்பட்டி - கோமக்குடி பகுதியில் வந்தபோது, எதிரேவந்த அரசுப் பேருந்துக்காக வழிவிடும்போது அருகே உள்ள சாலையோர வயல்வெளியில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட 20 போ் படுகாயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com