சனி, ஞாயிறு விடுமுறை: வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது

பொது விடுமுறை தினங்கள் என்பதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களிலும் தோ்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். மாா்ச் 23 - மாதத்தின் 2 ஆவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும். எனவே, இந்த நாள்களிலும் மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்களைப் பெற முடியாது. அதன்பின்னா் திங்கள்கிழமை முதல் (மாா்ச் 25) புதன்கிழமை (மாா்ச் 27) வரையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com