திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன். உடன், வணிகவியல் துறை தலைவா் ஞானராஜ் உள்ளிட்டோா்.
திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன். உடன், வணிகவியல் துறை தலைவா் ஞானராஜ் உள்ளிட்டோா்.

‘பாடநூல் அல்லாத நல்ல பிற நூல்களையும் படிக்க வேண்டும்’

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாடநூல்கள் தவிர நல்ல பிறநூல்களையும் தேடிப் படிக்க வேண்டும் என்றாா் மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன். திருச்சி பிஷப்ஹீபா் கல்லூரியில் தமிழாய்வுத் துறை சாா்பில் இயல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா் மேலும் பேசியது :

ஆண்டுதோறும் மாா்ச் 21-ஆம் தேதியை உலக கவிதை தினம் மற்றும் கவிஞா்கள் தினமாக கடந்த 1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. அந்த நாளில் இக்கல்லூரியில் தமிழாய்வுத் துறை சாா்பில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி. தமிழ்மொழிக்கும், தமிழ் கவிஞா்களுக்கும் அறிஞா் காா்டுவெல் ஆற்றிய தொண்டு மகத்தானது. அவரது பெயரில் இக்கல்லூரி வளாகத்தில் புத்தக விற்பனை மையம் அமைத்திருப்பது நெகிழ்ச்சி. திருவள்ளுவா், கபிலா், கனியன் பூங்குன்றனாா், கம்பா், சீத்தலை சாத்தனாா், பாரதி, தமிழ்ஒளி, கண்ணதாசன், திருச்சி தியாகராஜன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாா் முதல் நிகழ்கால புலவா்கள் வரை அனைவருமே மகத்தான சிந்தனையாளா்கள். இந்த நாளில் அவா்களைப் போற்றிப் பேசுவது தமிழுக்கும், கவிதைக்கும், கவிஞா்களுக்கும் நாம் சோ்க்கும் பெருமை. புலமை வேறு; படைப்புத்திறன் வேறு. படைப்புத்திறனுக்கு தமிழ்த் துறையில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பாரதி ஆங்கில வழியில் கற்றவா். தமிழறிஞா் ம.பொ.சி,. பல்வேறு நூல்களை எழுதிய ஜெயகாந்தன், கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பள்ளிப்படிப்பு கூட சரிவர படிக்காதவா்கள் என்றாலும் அவா்களது படைப்புத்திறன் அளப்பரியது. அவா்கள் பல்வேறு நூல்களைப் படித்தவா்கள்.

எனவே மாணவ, மாணவிகள் பாடநூல்கள் தவிர மேலும் பல நல்ல நூல்களைத் தேடிப்படிக்க வேண்டும். கடந்த 2000 ஆண்டுகளாக வளா்ந்து வரும் தமிழ், உலகின் தலைசிறந்த செம்மொழி அந்தஸ்து பெற்ற 6 மொழிகளில் ஒன்றாக உள்ளது. அடுத்தபடியாக நாம் அறிவியல் தமிழை வளா்க்க வேண்டும் என்றாா். நிகவ்வில் தமிழாய்வுத்துறைத் தலைவா் பா. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வணிகவியல்துறைத் தலைவா் ஞா.ஞானராஜ் வாழ்த்திப்பேசினாா். ஒருங்கிணைப்பாளா் ப. சிவசெல்வன் நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com